மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களினால் பெறுமதியான காசோலைகளை பயனாளிகளுக்கு பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (26) வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பொறியியலாளர் ஜீ.சுகுமாரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் பங்கு பற்றுதலுடன் தொழில் நுட்ப உத்தியோகர் எஸ். யதுஷாயினியின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு இடம் பெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் 216 வீடுகளை நிர்மானிக்கும் பணிகளை கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டது
இந் நிகழ்வில் 103 வீடுகளை பூரணமாக நிர்மானித்த நபர்களுக்கான இறுதிக் கட்ட காசோலைகள் வழங்கப்பட்டதுடன் மிகுதி வீடுகளை நிர்மானம் செய்பவர்களுக்கான காசோலைகளும் வழங்கப்படவுள்ளன.
கடந்த 10 வருடங்களாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையிற்கு 88.36 மில்லியன் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு இருந்த வேலையில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 2025 ஆண்டிற்கு மட்டும் 134.71 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பொறியியலாளர் எஸ். வினோராஜ் தேசிய மக்கள் சக்தியின் மாநகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
.jpeg)




.jpeg)

.jpeg)

.jpeg)


.jpeg)



.jpeg)






