ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம்.


ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அமெரிக்க - ஈரான் இடையே அதிகரித்து வரும் முறுகல் நிலைக்கு மத்தியில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கை பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.