கண்டி நகரில் நடைபாதையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வர்த்தக கூடங்களை அகற்றும் பணிகள் இன்றைய தினம் இடம்பெற்றன.
இவ்வாறான சட்டவிரோத வர்த்தக கூடங்கள் அகற்றப்படுமென கண்டி மாநகர சபை ஊடாக கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு வேறு இடத்திற்கு செல்வதற்கென கடந்த டிசம்பர் 31 வரை காலவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த வர்த்தகர்களுக்கென போகம்பர பகுதியில் இடமொன்றை வழங்க கண்டி மாநகர சபை நடவடிக்கை எடுத்திருந்தது. இதற்கமைய கண்டி நகர் உட்பட பேராதணை மற்றும் கட்டுகஸ்தொட்டை நகரங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த வர்த்தக கூடங்களை அகற்றும் பணிகள் நகர ஆணையாளர் இந்திகா குமாரி அபேசிங்க தலைமையில் இடம்பெற்றது.





