மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் வே.தவேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனனின் வழிகாட்டலுக்கு இணங்க பிரதேச இந்து கலாச்சார உத்தியோகத்தர்கள் மேகலா, குமுதினி ஆகியோர் அவசியமான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இதன்போது விளக்கேற்றல், நந்திக்கொடியேற்றல், அறநெறி கீதம் இசைத்தல், வாக்குறுதி எடுத்தல் மற்றும் தலைமையுரை, விளக்கவுரை ஆகிய நிகழ்வுகளுடன், அறநெறிப் பாடசாலைகளுக்கான பஞ்சாங்கமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் வே. தவேந்திரன், மாவட்ட செயலக இணைப்பாளர் க. குணநாயகம் மற்றும் இந்து சமய கலாச்சார உத்தியோகத்தர்கள் மேகலா, குமுதினி மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.





