புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுவிஸ் நாட்டில் வசிக்கு நர்மதா தினேஸ் அவர்களின் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் அவர்களின் நிதியுதவியின் கீழ் திருகோணமலை மூதூர் கிளிவெட்டி குமாரபுரம் கோகுலம் பாலர் பாடசாலை சிறார்களுக்கு பாடசாலை சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் தலைவரும், புனர்வாழ்வளிக்கப்பட்ட கட்சியின் தலைவருமான க.இன்பராசா தலைமையில் இவ்வுதவித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஒன்றியத்தின் ஆலோசகர் பா.மதன், ஒன்றியத்தின் முல்லைத்தீவு மாவட்ட செயற்பாட்டாளர் சி.மதிசன், பாலர் பாடசாலை பிரதான ஆசிரியை உள்ளிட்ட மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
யுத்தத்தில் அதிகம் பாதிப்புற்ற, பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களை அதிகமாகக் கொண்டதுமான கிராமமான குமாரபுரத்தில் இவ்வாறு பெண் தலைமைத்துவ குடும்ப சிறார்கள் கல்வி கற்கும் குறித்த பாலர் பாடசாலை தேர்வு செய்யப்பட்டு இவ்வுதவித் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வித அரசியல்வாதிகளாலும் கண்டுகொள்ளப்படாத இக்கிராம சிறார்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ள முன்னாள் போராளிகளின் ஒன்றியமான புனர்வாழ்வளிக்கப்பட்ட சமூக மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியம் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் முன்மொழிவின் அடிப்படையில் புலம்பெயர் உறவுகளின் நிதியுதவியின் மூலம் இவ்வாறான உதவிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


.jpeg)






