மட்டு.மாவட்ட சுகாதார சேவைகள் தொடர்பில் உயர் மட்ட மாநாடு

 









மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் தொடர்பிலான உயர் மட்ட மாநாடு ஒன்று நேற்று முன்தினம் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது.

 மாவட்டத்தில் உள்ள சுகாதார சேவைகள் சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. 

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் ஜி.சிறிநேசன் மருத்துவர் இ.சிறிநாத் ஆகியோர் மற்றும் பிராந்திய சுகாதார பணிமனையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் வாரம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சுகாதார அமைச்சரை சந்திப்பதற்கான ஏற்பாடு  ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதன் முன்னாயத்த கூட்டமாக இது அமைந்திருந்தது.
 
 
 ( வி.ரி.சகாதேவராஜா)