கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மட்;டக்களப்பு நகர் பகுதிகளில் அனர்த்தத்திற்கு பின்னரான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.




















வளமான நாடு அழகான வாழ்க்கை என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுவரும்  கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மட்டக்களப்பு நகர் பகுதிகளில்  அனர்த்தத்திற்கு  பின்னரான   டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
" ஒரு செழிப்பான தேசம் ஒரு அழகான வாழ்க்கை" என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய  ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka)  தொனிப்பொருளில் மூன்று நாள் தேசிய வேலைத்திட்டம்    மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில்  மாமாங்க பிரதேசத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
 இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ,  மாநகரசபையின் பிரதி ஆணையாளர்   மாநகரசபையின் உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள்  கிராம உத்தியோகத்தர்,மாநகரசபையின் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
மாமாங்கம்,கல்லடி,நாவற்குடா ஆகிய  நகரை அண்டிய   பகுதிகளில் உள்ள வீடுகள்மற்றும்வீடுகளின் கிணறுகள், வீதிகள் பரிசோதனை செய்யப்பட்டன.   ,  டெங்கு நுளம்புகளின் பெருக்கம் இடம்பெறுவதற்கு  வாய்ப்புள்ள   தெளிந்த நீர் தேங்கக்கூடிய பொருட்கள் , கைவிடப்பட்ட சிரட்டைகள், யோகட் கப்கள், பிளாஸ்ரிக் மற்றும் மட்பாண்டப் பொருட்கள், பொலித்தீன் பைகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.