மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய தேசிய பாடசாலையில் உப அதிபராக சேவையாற்றிய கிருஷ்ணபிள்ளை குமாரசிங்கம் தனது 33-வருட ஆசிரிய சேவையை நிறைவு செய்து 2025-12.22அன்று ஓய்வு பெற்றார்.
அன்றைய தினம் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்லூரி சமூகத்தினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கலாசார வளம் மற்றும் துடிப்பான கிராமப்புற வாழ்க்கையையும், ஆழமான வேரூன்றிய மரபுகளுடன் கிழக்குப் பாரம்பரியத்தின் வெளிப்பாடாகக் காணப்படும் எருவில் கிராமத்தை பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
கிருஷ்ணபிள்ளை குமாரசிங்கம் அவர்கள் மட்/பட்- எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை கற்று மட்டக்களப்பு கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் உயர்தரம் கற்றவராவார்.
01.04.1992-அன்று மட்/மண்டூர் மகா வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்று தனது ஆசிரியர் பணியை ஆரம்பித்தார்
குமாரசிங்கம் அவர்கள் பயிற்றப்பட்ட"வரலாறும் சமூகக்கல்வி" ஆசிரியர் மட்டுமல்லாது கல்விமாணி, பாடசாலை முகாமைத்துவம் டிப்ளோமா மற்றும் ஆலோசனை வழிகாட்டல் டிப்ளோமா ஆகிய பட்டங்களை பெற்று தனது கல்வித் தகைமைகளை உயர்த்திக் கொண்டார்.
மட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் மற்றும்
மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)ஆகியவற்றில் சேவையாற்றி 2018-ம் ஆண்டு மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய தேசிய பாடசாலையில் உப அதிபராக நியமனம் பெற்றார் .
அளவையியலும் விஞ்ஞான முறையும்,
வரலாறு,
குடியியற்கல்வி,
ஆலோசனை வழிகாட்டல் போன்ற பாடங்கள் கற்பித்து மாணவர்கள் சிறந்த சித்திகளைப் பெறுவதற்கு முன்னின்று உழைத்தவராவார். தனது சேவைக் காலத்தில் மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தவதில் ஆர்வத்துடன் செயற்பட்டார். சிறந்த பெறுபேற்றைப் பெறுவதற்காக உழைத்து மாணவர்களின், பெற்றோர்களின், கல்விச் சமூகத்தினதும் நன்மதிப்பினையும் பெற்றுக் கொண்டார்.
குறிப்பாக பாடசாலைகளின் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு முகங்கொடுத்து கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் மனப்பூர்வமான பணியில் ஈடுபட்டு 2025.12.22.அன்று கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
EDITOR































