மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 3.2 மில்லியன் ரூபா பெறுமதியான 230 மெத்தைகளை (Mattresses)ரோட்டரிக் கழகத்தினால் வழங்கிவைக்கப்பட்டது .














 மட்டக்களப்பு ரோட்டரிக் கழக தலைவர் பார்த்திபசுதன்  அவர்களின் ஒழுங்குபடுத்துதலில்    இங்கிலாந்தில் உள்ள ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு ரோட்டரி கழகமும் இணைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 3.2  மில்லியன் ரூபா பெறுமதியான 230 மெத்தைகளை  (Mattresses) வழங்கி வைக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது
 .
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர்  திருமதி  கலா ரஞ்சனி கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்ற மெத்தைகள்  கையளிக்கும் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் மட்டக்களப்பு ரோட்டரி கழக அங்கத்தவர்கள்  வைத்திய அதிகாரிகள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் இங்கிலாந்திலிருந்து  வருகை தந்திருந்த ரோட்டரி கழக உறுப்பினர்கள் ஆகியோரும்    நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

மனித நேயம் என்பது பிற மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செய்ல்படுவதே.
"மனிதன் அறிவாளியாவது எளிது, அறிவாளி மனிதநேயத்தோடு திகழ்வது தான் அரிதினும் அரிது."  பிறர் நலம் காக்க வேண்டும். பிறருக்கு உதவி புரிய வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே மனித நேயம் உயரும். மட்டக்களப்பு மாவட்டத்தில்  ரோட்டரி கழகமானது  சமூகத்துக்கு
பாரிய மனிதாபிமானப் பணிகளை   முன்னெடுத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும் .
battimedia.lk ஊடகம் ரோட்டரி கழகத்தின்  மனிதாபிமான செய்ற்பாடுகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது  .

editor