EDITOR
மட்டக்களப்பு மாநகரில் பல்லாண்டு காலமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்
பாலித்து வரும் அரசடிப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா,
எதிர்வரும் ஞாயிற்று கிழமை 2026.02.01-அன்று காலை 07.45-மணி முதல்
8.57.வரையான சுப முகூர்த்த வேளையில் இடம் பெற உள்ளது .
எதிர்வரும் 28 ஆம் திகதி புதன் கிழமை காலை 5.00 மணிக்கு கிரியாரம்பத்துடன், விசேட பூஜைகளும் வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன.
அத்துடன்,
ஜனவரி மாதம் 30ஆம் திகதி காலை முதல் 31.ம் திகதி சனிக்கிழமை மாலை
வரை எம் பெருமானுக்கு பக்தர்களால் எண்ணைக்காப்பு சாத்துதல் இடம்பெறும்.
அதனையடுத்து
பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி விசேட பூஜைகள், வழிபாடுகளைத் தொடர்ந்து
காலை 7.45 மணி முதல் 8.57 மணி வரையுள்ள சுபமு௯ர்த்தத்தில் மஹா கும்பாபிஷேக
நிகழ்வுகள் நடைபெற உள்ளது
கும்பாபிஷேக நிகழ்வுகளைத் தொடர்ந்து 24 நாட்களாக மண்டலாபிஷேகம் நடை உள்ளது .
பிரதிஷ்டா
பிரதம குரு சிவஸ்ரீ இலக்ஷிமிகாந்த ஸத்யோஜாத குருக்களின் தலைமையில்
கும்பாபிஷேக நிகழ்வுகள் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது .
கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டு எம் பெருமானின் பேரருளை பெற்றேகுமாறு ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் அழைக்கின்றனர் .
EDITER









































