"உறவுகளின் உறுதுணை" என்ற ஸ்லோகத்தை தாரக மந்திரமாக கொண்டு இயங்கும் வளைகுடா வானம்பாடி அமைப்பானது "அறிவார்ந்த கல்விச் சமூகத்தை கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் சமூக சேவையில் தனக்கென ஒரு உயரிய இடத்தை தக்க வைத்திருக்கும் இவ் அமைப்பானது இயற்கையின் சீற்றத்தால் அல்லலுறும் தாயக உறவுகளுக்காக.
அமைப்பின் தலைவர்
திரு.கனகரெத்தினம் கர்ணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் நண்பரான தொழிலதிபரும் கொடையாளியுமான திரு.சுரேஷ் பாவு அவர்களால் (இந்தியா-கேரளா)
நன்கொடையாக வழங்கப்பட்ட .20,00,000/=(இருபது லட்சம்) பெறுமதியான புதிய ஆடைகளை (1000)
இன்றைய தினம் குவைத் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மேன்மை தங்கிய Dr.லக்சித ரத்னாயக்க அவர்களிடம் தலைவர் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அமைப்பின் முன்னாள் செயலாளர்
திரு.த. புண்ணியமூர்த்தி, பொருளாளர் திரு.ப.தனஞ்ஜெயன்,
ஒருங்கிணைப்பாளர் திரு.வீ.கவிக்குமார் அங்கத்தவர்களான
திரு.ஆ.திலீபன்,பொ.லோகிதன் போன்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தாயக மக்களின் நிலை கருதி இப்பாரிய அன்பளிப்பு செய்த நன்கொடையாளருக்கு அமைப்பின் சார்பில் இதயம் கனிந்த நன்றிதனை தெரிவித்து கொண்டார்கள் .

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)





