வாழைச்சேனை ஆழ்கடல் மீனவர்களின் நீண்ட கால பிரச்சனைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் K . பிரபு மூலம் தீர்வு - படகில் பாதுகாப்பை மேம்படுத்தும் சிறப்பு கண்காணிப்பு கருவிகளை (VMS ) பொருத்த அமைச்சு துரித நடவடிக்கை-
வாழைச்சேனை பகுதியில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீன் பிடி படகுகளில் அதன் பாதுகாப்பு, மற்றும் அமைவிடம், பயணிக்கும் வேகம், உட்பட சகல விபரங்களையும் துல்லியமாக தானியங்கி மூலம் வெளிப்படுத்தும் சிறப்பு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்படாமையால் பல்வேறு சிரமங்களையும் இழப்புக்களையும் எதிர்கொண்டு வந்தனர் -
மேற்படி விடயம் தொடர்பிலும் வாழைச்சேனை பிராந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் மீனவ அமைப்பினால் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் கவனத்திற்கு கொன்டு செல்லப்பட்டதை அடுத்து அவரின் துரித வினைத்திறன் மிக்க செயற்பாட்டினால் கடற்றொழில் அமைச்சின் மூலம் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான க. பிரபு அவர்களது இந்த முயற்சி காரணமாக மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் அதே வேளை இலங்கை கடற்பரப்பை மீறி பயணிக்காமலும் சட்ட விதிகளை மீறாமலும், துறைசார் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு மற்றும் ஒழுங்கமைப்பில் மீன்பிடியை முன்னெடுக்க போவது வாழைச்சேனை பிரதேச மீனவர்களுக்கு பெரும் நம்பிக்கையினையும் ஆறுதலையும் அரசாங்கம் வழங்கி உள்ளதாக மீனவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
தன்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அமைச்சர் உட்பட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி இரு தரப்பு கலந்துரையாடல் ஒன்றிணையும் ஒழுங்கு செய்த அதேவேளை இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சி வெற்றி அடைந்துள்ளதாகவும், எதிர்வரும் ஜுன் மாத இறுதிக்குள் படகுகளுக்கு கண்காணிப்பு சாதனம் (VMS ) பொருத்த அவகாசம் வழங்கப்படும் அதே வேளை, பாதுகாப்பு சாதனம் மற்றும் பதிவு இன்றி உள்ள படகுகளுக்கு சலுகை அடிப்படையில் குறைந்தது 75 சதவீத மானிய வசதிகளை அமைச்சு மூலமாக ஏற்படுத்தி கொடுப்பதற்கான ஒழுங்குகளை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான திரு கந்தசாமி பிரபு அவர்கள் மேற்கொண்டிருப்பதாக வாழைச்சேனை ஆழ்கடல் மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளனர்,





