மது பிரியர்கள் ஆழ்ந்த சோகத்தில் ! மதுபானத்தின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்?

 


எதிர்காலத்தில் மதுபானத்தின் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 
 
இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. 
 
முன்னதாக அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியது. 
 
மேலும் வருடாந்திர கலால் வரி, பாதுகாப்பு வைப்புத் தொகை மற்றும் தொழில்துறை அணுகலுக்கான ஒரு முறை கட்டணம் ஆகியவை அதற்கேற்ப அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.