யுனெஸ்கோ அமைப்பின் கலாசார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள்
சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு, பாரம்பரிய சின்னத்தின் சரித்திர
காலம், கலைபடைப்புத் தன்மை உள்ளிட்ட சிறப்புகளின் அடிப்படையில், சர்வதேச
பாரம்பரிய நினைவு சின்னங்களுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது.
அந்த வகையில், யுனெஸ்கோவின் கலாசார
பாரம்பரிய பட்டியலில் இந்துக்களின் தீபாவளிப் பண்டிகையும்
சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்
ஷெகாவத் அறிவித்துள்ளார்.





