திருகோணமலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சிறீதரன் எம்பி நேரடி விஜயம்!

 





நேற்றைய தினம் திருகோணமலைக்குப் பயணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பல்வேறு தரப்பினரை சந்தித்ததுடன் வெள்ள பேரிடரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று, அப்பகுதி மக்களின் நிலைமைகளையும் கேட்டறிந்துகொண்டதுடன் மக்களுக்காக நிவாரணப் பணிகளையும் முன்னெடுத்திருந்தார்.
குறிப்பாக வெள்ளப் பேரிடரால் பெரிதும் பாதிக்கப்பட்ட மூதூர் மற்றும் வெருகல் பிரதேசங்களுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பிரதேச சபைகளின் தவிசாளர்களை சந்தித்ததுடன், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் துரித நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் கேட்டறிந்துகொண்டார்.
குறித்த பயணத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் பிரகலாதன், வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் கருணாநிதி, வெருகல் பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் சுந்தரலிங்கம், மேனாள் உப தவிசாளர் சங்கர், பிரதேச சபை உறுப்பினர் தனா, குச்சவெளிப் பிரதேச சபை உறுப்பினர் நிமலதாசன், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் எழில்வேந்தன் மற்றும் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வாலிப முன்னணியினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.