தற்போது நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலையிலும், ஆறு மாதங்கள் வரையான
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சு
தாய்மார்களுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தாய்ப்பாலே பாதுகாப்பானதும், முழுமையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுமாகும்.
இது
குழந்தைகளுக்கு நீர்ச்சத்து, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும்
அவசரகாலத்தில் உயிர்வாழ்வதற்குத் தேவையான நோயெதிர்ப்பு பாதுகாப்பை
வழங்குவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆறு மாதங்களுக்குக்
குறைவான குழந்தைகளுக்குத் தண்ணீர் கூடத் தேவையில்லை என்றும், ஆறு
மாதங்களுக்குப் பிறகே மேலதிக உணவுகளுடன் தாய்ப்பால் தொடர வேண்டும் என்றும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.





