மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர சுகாதார சேவைகள்.

 
 















 
 
RDHS-NEWS  @  BATTICALOA 
 
 
 
வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட #வாழைச்சேனை பிரதேச மக்களுக்கு, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி Dr. ஏ. பாமினி அவர்களின் தலைமையில் பரந்தளவிலான சுகாதார சேவைகள்வழங்கப்பட்டன,
 இந்த செயல்பாட்டில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள், மேலும் இராணுவத்தினரும் இணைந்து  பணியாற்றி இருந்தனர் .
 
வெள்ளத்திற்குப் பிந்தைய நோய்த் தொற்றுகளைத் தவிர்ப்பதற்காக, வெள்ளநீர் புகுந்த கிணறுகள் அனைத்தும் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு, இராணுவத்தினரின் உதவியுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் மேற்பார்வையில் குளோரினேற்றம் செய்யப்பட்டன.
அத்துடன், #கிண்ணையடி #சரஸ்வதி வித்தியாலயம் மற்றும் #முராவடை #சக்தி வித்யாலயம் ஆகிய இடைதங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்காக நடமாடும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. பரிசோதனைகளில் உடனடி சிகிச்சை தேவையென கருதப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும், தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கொசு தொற்று கட்டுப்படுத்துவதற்காக புகை விசிறல் (Fogging) மேற்கொள்ளப்பட்டது. கழிவகற்றல் செயல்பாடுகள் வலுப்படுத்தப்பட்டதுடன், சுத்தமான குடிநீர் விநியோமும் உறுதிசெய்யப்பட்டது.