ரயில்வே துறையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (12) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
ரயில் சேவையின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதைத் தடுத்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, இரண்டு பெண்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
அதன் போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பை முன் வைத்துள்ளார்.





