யானை தாக்கத்திற்கு உள்ளாகும் கிராமங்களை பாதுகாக்க யானை வேலி அமைக்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட உள்ளன- கந்தசாமி பிரபு

 


ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில் யானை தாக்கத்திற்கு உள்ளாகும் கிராமங்களை பாதுகாக்க யானை வேலி அமைக்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட உள்ளன பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்திற்கமைவாக இயற்கை அனர்த்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெப்ப வெட்டுவான் கிராமத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டார்.

அதன் பின்னர்  பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அக்கிராமத்துவாழ் மக்களிடம்  காட்டு யானையால் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கேட்டு அறிந்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக பத்து மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சகல மக்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை எனவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பணிகள் நிறைவடைந்த உடன் இதற்கான பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இந்நிலையில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகவே சென்று புனரமைப்பு பணிகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தேர்தல் காலங்களில் மட்டுமின்றி அனர்த்த நிலைமைகளின் போதும் ஜனாதிபதியின், அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும்  இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்து வரும் ஜனாதிபதிக்கு தமது நன்றியை தெரிவிப்பதாக  அப்பகுதி மக்கள் இதன் போது தெரிவித்தனர்