சமூக
நலன்புரி நிறுவனத்தினால், அவுஸ்திரேலியா மகளிர் இல்லத்தின் நிதி
உதவியுடன், அண்மையில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் பலத்த காற்றினால்
பாதிக்கப்பட்ட போரதீவுப்பற்று – வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 215
பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிவாரணப் பணி நேற்று
முன்தினம் நடைபெற்றது.
இந்த
பணியின்போது போரதீவுப்பற்று – வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் உதவிப்
பிரதேச செயலாளர் வி.துலாஞ்சன் முன்னி லையில் நிவாரணப் பொருட்களை நிறுவன
இணைப்பாளர் சிவசுந்தரி பிரபாகரன் மற்றும் ஊழியர்கள் பயனாளிகளுக்கு
கையளித்தனர்.
போரதீவுப்பற்று – வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனும் நிவாரணப் பொருட்களை கையளித்தார் .
நிகழ்வில் பல்வேறு அரச உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர் .
இந்நிகழ்வை
சிறப்பாக முன்னெடுக்க ஒத்துழைத்த அனைத்து அரச அதிகாரிகளுக்கும், எமது
நிறுவன உத்தியோகத்தர்களுக்கும், திலகவதியார் மகளிர் இல்ல பணியாளர்களுக்கும்
எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று நிறுவன ஸ்தாபக
தலைவர் கந்தப்பன் சற்குணேஸ்வரன் தெரிவித்தார்.
( வி.ரி.சகாதேவராஜா)













