இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்குக் கிடைக்கப் பெறும் சர்வதேச உதவிகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படமாட்டாது .

 


இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்குக் கிடைக்கப் பெறும் சர்வதேச உதவிகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படமாட்டாது என்ற நம்பிக்கை உள்ளது என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "கடந்த காலங்களில் நடந்த கசப்பான அனுபவங்கள் எமக்கு உள்ளன.

 சுனாமி மற்றும் கொரோனா காலகட்டங்களின் போது கொள்ளைகள் இடம்பெற்றன. அரசியல்வாதிகள் மோசடிகளில் ஈடுபட்டு தமது சொத்துகளைப் பெருக்கிக்கொண்டனர்.

இதனால் நாடு மீண்டெழ இருந்த சந்தர்ப்பம் இல்லாமல் போனது. எனினும், இந்த ஆட்சியில் அப்படி நடக்காது என்ற நம்பிக்கை உள்ளது.

கிடைக்கும் வெளிநாட்டு உதவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோசடி இல்லாமல் சென்றடையும்" என்றார்.