அரசாங்கம் செய்வது அனைத்தையும் ஆமோதித்து அவர்களை பாராட்டுவது மட்டுமே எதிர்கட்சிகளின் பொறுப்பு என, அரசாங்கம் கருதுகிறது -பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார்

 


 

அரசாங்கத்தின் பிழைகளை சுட்டிக் காட்டுவது எதிர்க்கட்சிகளின் தலையாய கடமையென, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சிறந்தவை, அவற்றை அப்படியே செய்யட்டுமென அரசுக்கு கொடிபிடிப்பது எதிர்க்கட்சியின் கடமையில்லை எனவும் மரிக்கார் எம்.பி.தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு நெருக்கடியான தருணங்களில் உதவுவதைப் போன்று அரசாங்கம் மேற்கொள்ளும் முட்டாள்தனமான செயல்பாடுகளை விமர்சனம் செய்வதும் எமது கடமையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் செய்யும் அனைத்து செயல்பாடுகளையும் புகழ்ந்து பாராட்டிக் கொண்டிருப்பது நல்லதொரு எதிர்க்கட்சியின் பொறுப்பு அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விமர்சனங்களை எதிர்கொள்ள தயார் இல்லை என்றால், அவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது.தமக்கு தனிப்பட்ட ரீதியில் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்படுகின்றபோதும் அவற்றை தாம், பொருட்படுத்துவதில்லை எனவும் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அரசியல் என்பது பொறுமையின் விளையாட்டு என, முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்க கூறியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அரசாங்கம் செய்வது அனைத்தையும் ஆமோதித்து அவர்களை பாராட்டுவது மட்டுமே எதிர்கட்சிகளின் பொறுப்பு என, அரசாங்கம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.