மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி கல்கிஸ்ஸ பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று (13) இரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆண் சந்தேகநபர் ஒருவரும் இரண்டு பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு, கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர் 55 வயதுடையவர் எனவும் பெண் சந்தேக நபர்கள் 20 மற்றும் 24 வயதுடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
அவர்கள் வெயாங்கொட, கம்பஹா மற்றும் மடுல்சிம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





