அளுத்கமை பகுதியில் பணம்
மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்
கொழும்பு வடக்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் திருடிய 8 இலட்சம் ரூபாய் பணத்தை சூதாட்டத்திற்கும் தனது காதலிக்கும் செலவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சந்தேகநபரிடமிருந்து 1.5
இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம், அத்துடன் காதலிக்கு பரிசளிக்கப்பட்ட 4
இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் கைத்தொலைபேசி மற்றும் 61 மாணிக்கக்
கற்கள் ஆகியவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.





