நீண்டகாலமாக மீனவர்கள் கடற்கரையோரத்தில் புனித அந்தோனியார் திருச் சுரூபங்களை ஸ்தாபித்து தொழிலுக்குச் செல்லும்போது வழிபட்டு வரும் திருச்சுரூபங்கள் விஷமிகளால் சேதமாகப்பட்டுள்ள சம்பவங்கள் மன்னார் மறைமாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் மன்னார் மறைமாவட்டத்தில் சிறுத்தோப்பு பங்கில் மூன்று இடங்களில் வியாழக்கிழமை (11.12) இரவு இடம்பெற்றுள்ளதாக சிறுத்தோப்பு பங்குத் தந்தை அருட்பணி லியோன் அடிகளார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது
சிறுத்தோப்பு பங்குக்கு உட்பட்ட கடற்கரையோரங்களில் மீனவர்கள் தாங்கள்
கடலுக்குச் செல்லும் முன் இறைவனை வழிபட்டு செல்லும் வழக்கமுடையவர்களாக
காணப்பட்டு வருவதாகவும்
இதன் நிமித்தம் இப்பகுதிகளில் கடற்கரையோரங்களில் புனித அந்தோனியார் சுரூபங்கள் ஸ்தாபித்து மீனவர்களால் வைக்கப்பட்டுள்ளன.
இதில் சிறுத்தோப்பு பங்கின் கீழ் உள்ள காட்டாஸ்பத்திரி- சிறுத்தோப்பு மற்றும் தாழ்வுபாடு மீன்பிடி பாடு ஆகிய இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த புனித ஆந்தோனியார் திருச்சுரூபங்கள் விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்தாக முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ஏனைய சுரூபங்கள் இங்கு இருந்தபோதும் புனித அந்தோனியார் சுரூபங்களை சேதப்படுத்துவதிலேயே இனம் தெரியாத இந்த விஷமிகள் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இது தொடர்பாக எவரும் சந்தேகத்தின் நிமித்தம் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவங்களை அறிந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை சம்பவ இடங்களை நேரடியாக சென்று பார்வையிட்டார்





