வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்திய ராணுவ வைத்திய குழு இன்று சேவையை தொடங்கும்.

 





இலங்கை|| தற்காலிக மருத்துவமனை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட உதவிகள் அளிக்க இந்திய ராணுவத்தை சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியர்களான 73 வீரர்கள் அடங்கிய குழு இலங்கை வந்தடைந்தன:
இந்திய விமானப்படையின் C17 குளோப்மாஸ்டர் விமானம் மூலம் ஆம்புலன்ஸ்கள், அவசர சிகிச்சை பிரிவுகள், அறுவை சிகிச்சை அரங்குகள் போன்றவற்றுடன் கூடிய விரைவாகப் பயன்படுத்தக்கூடிய கள மருத்துவமனை உள்ளிட்ட
Full Setup அமைப்புடன் 73 மருத்துவ பணியாளர்களுடன் 
நேற்று மாலை 2/11/25) மாலை இலங்கை வந்தடைந்தன.
இந்த கள மருத்துவமனை குழுவை இந்திய தூதராக அதிகாரி சந்தோஷ் ஜா வரவேற்று இலங்கை ராணுவ தரப்பிடம் ஒப்படைத்தார். வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த குழு  இன்று   சேவையை தொடங்கும்.