ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் முப்பெரும் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றது!












 மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் முப்பெரும் விழாக்கள் (06) வியாழக்கிழமை பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ. எம். கலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ. எல்.சேட், ஆப்தீன் கலந்து கொண்டார்.

மேலும், கௌரவ அதிதிகளாக சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (CAFFE) அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மற்றும் சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் மாவட்ட பிரதிநிதி ஏ. எல். மீரா சாஹிப், ஓய்வுபெற்ற ஆசிரியர் எம். ஏ. சீ. எம். ஹிபதுல்லாஹ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஊடக அதிதியாக ஊடகவியலாளரும் ஊடக வளவாளருமான எஸ். சஜீத் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பரிசளிப்பு விழா, கலை விழா மற்றும் ஆங்கில பெஸ்டிவல் என முப்பெரும் விழாக்கள் இடம்பெற்றன.

நிகழ்வை அலங்கரிக்கும் வகையில் மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளையும் வினோத உடை அணிவகுப்பை யும் மேடையில் அரங்கேற்றினர்.

இதன்போது, சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் அமைப்பின் உதவித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதனை சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதி ஏ. எல். மீரா சாஹிப் மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.

அத்துடன், வாசிப்பு மாதத்தை முன்னிட்டு முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இவை பிரதம அதிதி, கௌரவ அதிதிகள் மற்றும் ஊடக அதிதி ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்

  (ஏ.எல்.எம்.சபீக்)