நானுஓயா, இராகலையில் கல்முனை கனடா இணையம் உலருணவு விநியோகம்

 

நானுஓயா,  இராகலையில் கல்முனை கனடா இணையம் உலருணவு விநியோகம் 
( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை பிராந்திய இணையம் கனடா, மற்றும் கனடாவில் தொழில் புரியும் தாயக நண்பர்களது உதவியில் அனர்த்த அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நுவரெலியா மாவட்டத்தின் சில கிராமங்களில் உலருணவு நிவாரண உதவிகள் நேற்று வழங்கப்பட்டன.  


 
 








 
நுவரெலியா நானுஓயா பகுதியில் இரண்டு பிரிவுகளிலும்,இராகலை பகுதி மக்களுக்கும் குறித்த உலருணவுப்பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

கல்முனை பிராந்திய இணையம் - கல்முனை அமைப்புடன் இணைந்து சில உறவுகளின் நிதி பங்களிப்பும்,கனடா வாழ் தாயக நண்பர்கள் மாறன்,மதன்,அசோக்,ரதன்,சுதர்சன்,குஞ்சன்,கேசவன்,தீபன்,குணசீலன்,குமார், சிவதாஸ்,ரவி ஆகியோரது நிதிப்பங்களிப்புடனும் இந்நிவாரணபணி முன்னெடுக்கப்பட்டது..

நுவரெலியா நிவாரண பயணம் ஒரு திகில் நிறைந்ததாக நிவாரண பணியில் தலைமையேற்று சென்ற கல்முனை நெற் ஊடகவியலாளர் என். சௌவியதாசன் கூறினார் .

  மக்கள் எந்த நேரத்திலும் எதுவும் நுடக்கலாமென்ற அச்சத்துடனேயே வாழ்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

 இந்த நிவாரணப் பணியை முன்னெடுப்பதற்கு அனுசரணையாகவிருந்த கல்முனை பிராந்தியம் கனடா அமைப்பின் பிரதான இணைப்பாளர் எஸ். விஜயரெட்ணம்  நொனிசப், தலைவர் விசு. கணபதிப்பிள்ளை அமைப்பின் நி்ர்வாக உறுப்பினர்கள் மற்றும் இணைந்த உறவுகள் நண்பர்களுக்கும் மக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.


நிவாரணப் பணியில் பிரதான இணைப்பாளர் என். செளவியதாசன் மற்றும் பெரியநீலாவணை நெக்ஸ் ரெப் அமைப்பின் இளைஞர்கள்,  வரதராஜன் , கிருபானந்தன்,தர்சன் ஆகியோர் பங்கேற்றனர்.
 
 ( வி.ரி.சகாதேவராஜா)