விரைவில் அரச சேவை மற்றும் அரச சேவை அல்லாத பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது -பிரதமர்

 


அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த நீதிமன்ற வழக்கு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் அரச சேவை மற்றும் அரச சேவை அல்லாத பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்  கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சரான ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த வகையில் வயதெல்லை திருத்தம் செய்யப்பட்டு பரீட்சையை நடத்தி பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.