
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து வெளிநாட்டு அமைச்சினால் தொடர்ச்சியாக உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றது. அந்தந்த நாட்டு அரசாங்கங்களினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் இலங்கைத் தூதரகங்களினால் வழங்கப்படும் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு அங்குள்ள இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
இந்தச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய அவசர செயற்பாட்டு மையமொன்று நிறுவப்பட்டுள்ளது. ஏதேனும் அவசரத் தேவைகள் இருப்பின் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்படுகின்றது.
* WhatsApp/Imo: +94 71 980 2822
* துரித அழைப்பிலக்கம் (Hotline): 1989





