வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்கள் விரைவில் வழமை நிலைக்கு திரும்ப வேண்டி கிழக்கு மாகாணத்தில் விசேட வழிபாடுகள் முன்னெடுப்பு

 



 


 


 







நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் சுகம் பெற வேண்டி அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

 இதே வேலை கிழக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவகுமார குருக்கள் தலைமையில் இன்று  விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது

 இந்து மக்களின் விசேட விரதங்களில் ஒன்றான விநாயகர் காப்பு வழிபாடுகள் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பிள்ளையார் ஆலயங்களிலும் சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் இன்று 15 வது நாளாக விரதம் அனுஷ்டிக்கப்பட்டு விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது 

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலும் இடம்பெற்ற இந்த விரத வழிபாடுகளில் பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

 வரதன்