சிறைக் கைதிகளின் உரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பில் .

 


சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினரினால் விழிப்புணர்வுகள் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் முகாமையாளர் ரசிக்க குணவர்த்தன தலைமையில் சர்வோதயா மண்டபத்லில் இன்று (11) இடம் பெற்றன.

கொழும்பை தலைமையமாக கொண்ட சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினர்”கைதிகளின் உரிமைகளை பாதுகாத்து மனித பெருமையினை உயர்த்துவோம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்வதற்கான செயற்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றது.

சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினர் கைதிகளின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான சட்ட ரீதியான உதவிகளை பத்து வருடங்களிற்கு மேலாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் பணிப்பாளர் சுதேஸ் நந்திமாசில்வா, திட்ட அதிகாரி தி. ஷாமினி, ஊடக இணைப்பாளர் கலும்விஜேசிங்க என பலர் கலந்து கொண்டனர்.