அதிதீவிர வானிலையால் பால் உற்பத்தி குறைவடைந்துள்ளது .

 


நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையை அடுத்து, பால் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தேசிய கால்நடை மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. 
 
இதன்படி, ஒரு நாளைக்கு 2,000 லிட்டர் பால் உற்பத்தி குறைந்துள்ளதாக, அந்த பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. 
 
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால், சிலாபம் பகுதியில் உள்ள பால் உற்பத்தி நிலையம் ஒன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனினும் குறித்த பகுதியில் கால்நடைகளுக்கு அதிக சேதம் ஏற்படவில்லை என்றும் தேசிய கால்நடை மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.