மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்ற பௌர்ணமி விழாவில் பிரதம அதிதியாக கலந்த கொண்ட மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் இ.திரேசகுமாரன் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில் மாகாண சபைக்குட்பட்ட பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மாதாந்தம் மேற்கொள்ளும் பௌர்ணமி நிகழ்விற்கான பணத்தினை 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கியுள்ளதாகவும், இது தொடர்பில் கலாசார உத்தியோகத்தரிடம் ஏற்கனவே தான் குறிப்பிட்டுள்ளதாகவும் தனது உரையில் கூறினார்.
படையாண்டவெளி மாருதம் கலைக்கழக ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய இந் நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மூ.சிவானந்தராஜா கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வண்ணக்கர் சி.கங்காதரன், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சு.ருபேசன், கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது இளம் கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், கலைஞர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.







