மட்டக்களப்பு கித்துள் குளத்தில் நீரை மேகம் உறிஞ்சும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த இயற்கை நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
கடல் நீரின் ஈரப்பதத்தை மேகங்கள் உறிஞ்சி, பின்னர் மழையாகப் பொழியும் இந்த அதிசயம், பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும், இது ஒரு அற்புதம் போல் தோன்றினாலும், நீராவிப் போக்கு (evaporation) மற்றும் மேக உருவாக்கம் என்ற அறிவியல் நிகழ்வின் ஒரு பகுதியாகும், குறிப்பாக கடலுக்கு அருகில், வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் கலவையால் இது ஏற்படுகிறது.
இந்நிலையில் குளத்தின் நீரை உறிஞ்சும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிவருகிறது.





