இலங்கையில் தங்க நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது-இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது.

 


 

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் அதற்கு இணையாக உள்நாட்டிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இன்றைய (12) நிலவரப்படி உலக தங்க விலை 4,266 டொலராக அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டு தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில்  ரூ. 3,000 ஆல் அதிகரித்துள்ளது.

அதற்கமைய, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 312,000 ஆக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் இதன் விலை 309,200 ஆக காணப்பட்டது.

அதேவேளை, நேற்று ரூ. 336,000 ஆக காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று ரூ. 339,000 ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.