சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி உளசமூக ஆதரவு நிழல் அமைப்பின் ஏற்பாட்டில் மனிதநேய செயல்பாடுகள்.

 


 








 







 







 

 
























சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு  மட்டக்களப்பில் மனிதநேய  செயல்பாடுகள்.

உளசமூக ஆதரவு நிழல் அமைப்பின், தலைவி தெரிவிப்பு.

மட்டக்களப்பு  சர்வதேச உளவியல்சார்  கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளரும்    உளசமூக ஆதரவு நிழல் அமைப்பின் தலைவியுமான தேவரஞ்சினி பிரான்சிஸ்  தலைமையில் "மனநலமும் மனித உரிமையும்" எனும்  தொனிப்பொருளில்  மனிதநேயச் செயல்பாட்டு நிகழ்வு மனித உரிமைகள் தினமான இன்று (10.12.2025) மேற்படி அமைப்பில் இடம் பெற்றது.

மேற்படி அமைப்பின் தலைவி தேவரஞ்சினி பிரான்சிஸ் உயிர்காக்கும் உன்னத செயலான இரத்ததான செயலை இரத்தம் வழங்கி ஆரம்பித்து  வைத்ததை தொடர்ந்து உளசமூக நல உறுப்பினர்களும் இரத்தத்தை தானமாக வழங்கினர்.

இன்றைய சமூகத்தில் மனப்பாங்கில் மாற்றம் இல்லாத செயற்பாடுகள் மனிதர்கள்  மத்தியில் வளர்ந்துகொண்டு செல்வதால்  மனிதநேயம் குறைவடைந்து காணப்படுகின்றது என்பதை சுட்டிக் காட்டியும் ,

இதனால் ஏற்படும்  மனநல பாதிப்பும் மனித உரிமை மீறல்களையும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுடன்
மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில்  நாம் அனைவரும் மனிதர்கள் என்ற மனப்பாங்கில் நம் வாழ்வை மாற்றி  உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட , செய்யும் ஒவ்வொரு செயலையும் கருணை உள்ளத்துடன் நாம் செய்ய  வேண்டும் என வலியுறுத்தியும் இந்நிகழ்வு இன்று இடம் பெற்றது.

இன்றைய நிகழ்வில் இனம் காணப்பட்ட உறவுகள் 10 பேருக்கு 5000.00 பெறுமதியான  (5000.00 × 10 = 50000.00)  உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஒரு மாணவிக்கு 6000.00 பெறுமதியான பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் மேற்படி மனிதநேய நிகழ்வில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிவதற்கு தமது சொந்த உழைப்பில் இருந்து பண உதவி புரிந்த,  Mr.MI.Fahir (MIU. பல்கலைக்கழக விரிவுரையாளர், இலங்கை மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினர், உளசமூக நல உறுப்பினர்) Mr.Nicholas Nirakshan ( MIU பல்கலைக்கழக விரிவுரையாளர், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினர், உளசமூக நல உறுப்பினர்) Mr.J.Thipeshkaran (MIU பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை மாணவன்,இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினர் , உளசமூக நல உறுப்பினர்) Mr. S.Sivakumar (MIU பல்கலைக்கழகத்தின் உளவியல்துறை மாணவன், உளசமூக நல உறுப்பினர்) ஆகியோருக்கு எமது அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

 EDITOR