தமிழர் பிரதேசத்தில் புதையல் இருக்கிறதா ?அம்பாறை பெரிய நீலாவணையில் புதையல் தோண்டும் நவீன கருவி மீட்கப்பட்டுள்ளது .

 


புதையல் தோண்டும் நவீன கருவி ஒன்று மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதி வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் புதையல் தோண்டும் நவீன கருவி மீட்கப்பட்டிருந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மாலை குறித்த கருவி மீட்கப்பட்டு பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட ஜேர்மனி நாட்டு தயாரிப்பிலான குறித்த கருவி நிலத்தடியில் உள்ள தங்கம் உட்பட புதையல்களை இலகுவாக கண்டறியக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் வேறு ஏதாவது சட்டவிரோதமான பொருட்கள் தொடர்பில் புலன்விசாரணைகளை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பி.கஜேந்திரனின் வழிகாட்டுதலில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 பாறுக் ஷிஹான்