கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் தொழில் வழிகாட்டல் நடமாடும் சேவை.

 


அதிமேதகு ஜனாதிபதியின் அநுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவில் உதித்த “கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் “மகிழ்ச்சியான நாடு கிராமம் தோறும்” எனும் நிகழ்ச்சித் திட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலகத்துடன் இணைந்து தொழில் வழிகாட்டல் நடமாடும் சேவை இன்று (12) இடம் பெற்றது.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் திருமதி.பி.நிருபா அவர்களின் ஏற்பாட்டில் கிரான் ரெஜி மண்டபத்தில் தொழில் வழிகாட்டல் தொடர்பான சேவையினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் பிரதம அதிதியாககலந்து கொண்டு ஆரம்பித்துவைத்தார்.

கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் தொழில் வழங்குனர்களுடனான நேர்முக தேர்வுகளும் இடம் பெற்றன.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி.கே.லக்சிகா மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் திருமதி.ஜே.நிமாஜினி ஆகியோரினால் வடிவமைக்கப்பட்டு கணனி முறைமையினூடாக தரவுகள் இலத்திரனியல் முறையில் பதிவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரச மற்றும் அரச சார்பற்ற தொழிற்பயிற்சி நிறுவனங்கள் பல கலந்து கொண்டதுடன் தனியார் தொழில் வழங்குவதற்கான நிறுவனங்கள் கலந்துகொண்டு நேர்முக தேர்வுகள் மூலம் தொழில் வாய்ப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் கிரான் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.வி.லோகினி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவனேசராஜா, தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்கள், அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் பிரதி நிதிகள் பிரதேச செயலக உயரதிகாரிகள், என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு தொடர்பான தெளிவூட்டல்களை மாவட்ட மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.கருணாகரன் அவர்களினால் வழங்கப்பட்டதுடன் , தொழில் ஒன்றைபெறுவது எவ்வாறு, தொழிற்பயிற்சின் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய தொழில் மற்றும் சுய தொழில் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.