மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ஒன்று கூடல் மண்டபத்தில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் பற்றிய பயிற்சி பாசறை











மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ஒன்று கூடல் மண்டபத்தில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr.R.முரளிஸ்வரன் அவர்களின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைகள் , பிரதேச வைத்தியசாலைகள்மற்றும் கால்நடை வைத்திய அதிகாரிகள் தாதிய உத்தியோகத்தர்களுக்கான நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் பற்றிய பயிற்சி பாசறை 15.12.2025 நடைபெற்றது.

நுண்ணியிர் கொல்லி மருந்துகள் சென்ற நூற்றாண்டில் நடுப்பகுதியில் இருந்து பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.இவற்றின் சக்தியால் மனிதர்களின் ஆயுட் காலம் நீடித்துள்ளது.பல புதிய சிக்கலான மருத்துவ சிகிச்சை முறைகள் வெற்றிகொண்டுள்ளன.ஆனால் முறையற்ற மருந்துகளின் பாவனை நுண்ணுயிர்களுக்கிடையே எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது.இதனால் பல தொற்றுநோய்களுக்கு எம்மால் சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அத்துடன் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் எமது உடலில் ஒன்றி வாழும் பக்றிரியாக்களில் தாக்கங்கள் விளைவிக்கின்றன.இது மிகநீண்டகால பாதிப்பை தோற்றுவிக்கின்றது.

வைத்தியர்கள் தேவை கருதி மட்டுமே பரிந்துரைப்பதுடன்,பரிந்துரைக்கும் நாட்கள்,அளவு என்பவற்றில் கவனத்துடன் செயற்படவேண்டும் என வைத்திய நிபுணர் Dr.R.வைதேகி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை 
நுண்ணுயிரியல் நிபுணர் அவர்களினால் பயிற்சிகள் நடாத்தப்பட்டது.

நுண்ணியிர் கொல்லி மருந்துகளை தேவை உணர்ந்து பிரயோகிப்பதன் முக்கியத்துவம் பற்றி பிரதிபிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr.மோகனகுமார் அவர்களால் வலியுறுத்தப்பட்டதுடன் பிராந்திய சுகாதார வைத்தியர்கள்,மற்றும் கால்நடைவைத்தியர்கள் இணைந்து செயல்படும்போது எதிர்காலத்தில் பல தொற்று நோய்களைத் தடுக்க முடியும் எனவும் கூறினார்.

மேற்படி பயிற்சி பாசறை பிராந்திய சுகாதார தரம் மற்றும் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி Dr.J. சகாயதர்ஷினி அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.பொதுமக்கள் மருத்துவ ஆலோசனையின்றி நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் பாவிப்பதை தவிர்க்க வேண்டும்.சுகாதார பழக்கவழக்கங்கள் மூலம் தொற்றுநோய்களை தவிர்க்கலாம்.