அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்பும் மட்டக்களப்பு மாநகர சபையின் மனிதாபிமான செயற்திட்டத்தின் ஊடாக ஒரு தொகை பொருட்களை மட்டக்களப்பு மருத்துவமனைகள் தொண்டு நண்பர்கள் லண்டன் (FOBH - UK) அமைப்பின் தலைவரும் தமிழ் வைத்தியர் நிபுணர் சங்கம் லண்டன் (MIOT - UK) அமைப்பின் போசகருமான வைத்திய கலாநிதி திருமதி.காந்தா நிரஞ்சன் அவர்களுடைய நிதியுதவியன் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ ஆணையாளர், கௌரவ மேயர் மற்றும் கௌரவ பிரதி மேயர் போன்றவர்களின் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.










