கடல்நீரேரியில் நீந்திக் குளிக்க முயற்சித்த இரண்டு இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள் .

 


 யாழ்ப்பாணம் - பண்ணை கடல்நீரேரியில் நீந்திக் குளிக்க முயற்சித்த போது இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
 
பண்ணை கடல்நீரேரியில், சிறு படகில் சென்ற 04 பேர் நீந்திக் குளிக்க முயற்சித்துள்ளனர். 
 
இதன்போது அவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். 
 
இதனை அவதானித்த அந்த பகுதி மக்கள், காவல்துறையினரின் உதவியுடன் நால்வரையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதித்தனர். 
 
எனினும், அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
கொக்குவில் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். 
 
இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.