மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத்
திட்டம் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் திருகோணமலை
மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் மாவிலாறு அனைக்கட்டு
உடைப்பெடுத்தமையால் வெள்ளத்தால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட
குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கு நிகழ்வு இடம் பெற்றது.
இந்நிலையில்
வெள்ளத்தால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு உலர்
உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் வழங்கி
வைக்கப்பட்டது.
லண்டன் சிவன் ஆலய அறக்கட்டளை அமைப்பின் பத்து
இலட்சத்து இருபத்தி இரண்டாயித்து தொள்ளாயிரத்து ஐம்பது ரூபாய் நிதி உதவி
அமைப்பின் பிரதிநிதி சமூக சேவையாளர் வைத்திய கலாநிதி
எஸ்.ஸ்ரீஸ்கந்தராஜாவின் ஏற்பாட்டின் மூலம் வழங்கப்பட்டு மட்டக்களப்பு
மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் 500 குடும்பங்களுக்கு இரண்டாயிரத்து
இருநூற்றி ஐம்பது ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி
வைக்கப்பட்டதுடன், வாகன உதவியை வாழைச்சேனை வர்த்தக சங்கம் வழங்கினார்கள்.
குறித்த
உதவியானது இலங்கைதுறை முகத்துவாரம் புன்னையடி பகுதிக்கு 320 பொதிகளும்,
முட்டுச்சேனை பகுதிக்கு 28 பொதிகளும், சூரநகர் பகுதிக்கு 152 பொதிகளுமாக
500 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிவாரண
உதவி வழங்கும் நிகழ்வில் திர்கோணமலை திருக்கோஸ்வரர் ஆலய தலைவர் சட்டத்தரணி
எஸ்.துஸ்யந்தன், வெருகல் பிரதேச சபை தவிசாளர் எஸ்.கருணாநிதி, உப தவிசாளர்
எஸ்.மாணிக்கம், சபை உறுப்பினர்களான நா.குணபாலசிங்கம், இ.சுசிலா,
வீ.கஜரூபன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பேரவை
உறுப்பினர்களான சா.லோகநாதன், நா.ஜெகன், இ.சசிகுமார், ஆகியோர் கலந்து
கொண்டு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்.
ந.குகதர்சன்











.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)




