முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொழும்பில் மீண்டும் குடியேறவுள்ளார் .

 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொழும்பில் மீண்டும் தங்குவதற்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதன்படி, கொழும்புப் பிரதேசத்தில் அவருக்குப் பொருத்தமான வீடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

தனது உடல்நலக் குறைபாடுகளுக்குச் சிகிச்சைகள் பெறுவதற்கு இலகுவாக இருப்பதும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குச் சௌகரியமாக இருப்பதும் இந்த நடவடிக்கைக்குக் காரணமாகும்.

அத்துடன், அவரது அரசியல் ஆதரவாளர்களையும், நண்பர்களையும் சந்திப்பதற்கு இலகுவாக இருப்பதும் இந்த முயற்சியில் எதிர்பார்க்கப்படுகிறது.