"AI ஒரு நீர்க்குமிழி" முதலீட்டாளர்களுக்கு AI துறையில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் .பில்கேட்ஸ் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை

 
 

AI துறையில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என, தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னணி தொழிலதிபர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். 
 
அமெரிக்காவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் நிறுவனரான பில்கேட்ஸ், முதலீட்டாளர்களுக்கு AI துறையில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார். 
 
அபுதாபியில் நடைபெற்ற தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பில்கேட்ஸ் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார். 
 
மிகவும் போட்டி வாய்ந்த துறையாக செயற்கை நுண்ணறிவுத் துறை மாறி வருவதாகக் குறிப்பிட்டுள்ள பில்கேட்ஸ், இந்த கடும் போட்டி வருங்காலங்களில் நீடிக்குமா என்று கேட்டால் இல்லை என தான் சொல்வேன் எனவும் தெரிவித்துள்ளார். 
 
அத்துடன், "AI ஒரு நீர்க்குமிழி, இதில் தொழில் நிறுவனங்களின் முதலீடுகள் உயருமா என்றால் வாய்ப்பில்லை, எனவே இதில் உள்ள முதலீட்டாளர்களுக்கு இது மிகப்பெரிய சரிவைத் தரும்" என்று பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.