நீர் உள்வருகை வெளியேற்றல் மற்றும் மழை வீழ்ச்சிகளை அளவிடுவதற்காக ஏற்கனவே உன்னிச்சை நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிறுவப்பட்டது போன்ற நீரியல் அளவீட்டு நிலையங்கள் (Hidro Metro Station) உறுகாம குளம், மாவடிஓடை பாலம் மற்றும் காட்டுமுறிவு ஆகிய குளங்களில் பூட்டப்பட்டுள்ளன.
ஆனால் இன்னும் கணினிக்கு இணைக்க முடியவில்லை, அனைத்து அளவீடுகளையும் சரிசெய்த பிறகு இணைக்க உள்ளதாகவும்
மேலும் மற்றொரு திட்டத்தில் வேறு இடத்தையும் தெரிவு செய்ய முன்மொழிய உள்ளதாகவும் தகவல்.
அனைவரும் சேர்ந்து திட்ட முன்மொழிவுகள் மற்றும் நிதியுதவியை கருத்தில் கொண்டு 03 கட்டங்களாக பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் நீர்ப்பாசன திணைக்களத்தின் வேலைகளை பாராட்டி ஆக வேண்டும்.
அடுத்த கட்டமாக கீழ் வரும் இடங்களிலும் நிர்மானிக்கப்படும் பட்சத்தில் வெள்ள அனர்த்தங்களுக்கு முன்னர் எதிர்வு கூறல்களை மேற்கொள்ள முடியும்.
ஆகையால் தயவுசெய்து செங்கலடி,
வலையறவு
கிரான், ஓட்டமாவடி,
வள்ளியாத்து பாலம் வண்ணாத்தியாறு மற்றும் பொண்டுகள்சேனை
பாலங்களையும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
எழுவான் ரமேஷ்





