டிட்வா சூறாவளி காரணமாக இதுவரை 611 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 

டிட்வா சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இதுவரை 611 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கண்டி மாவட்டத்தில் 232 அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன. 
 
மேலும் 213 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
இந்த அனர்த்தத்தால் 576,626 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் பாதிக்கப்பட்ட மொத்த மக்களின் எண்ணிக்கை 2,054,535 ஆகும்.
 
4,309 வீடுகள் முழுமையாகவும் 69,635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.