நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக 5354 பேர் முழுமையாக வீடுகளை இழந்துள்ளனர்.

 

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு வெள்ளப்பெருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதில்   5 இலட்சத்து 01 ஆயிரத்து 958 குடும்பங்களைச் சேர்ந்த 17 இலட்சத்து 37 ஆயிரத்து  330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுவரை 638 பேர் உயிரிழந்துள்ளதுடன் 191 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில்

புத்தளம் மாவட்டத்தில்  98146 குடும்பங்களை சேர்ந்த  349429 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 பேர் காணாமல்போயுள்ளனர். 37 பேர் உயிரிழந்துள்ளனர்

பதுளை மாவட்டத்தில் 17436 குடும்பங்களை சேர்ந்த 58699 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 90 பேர் உயிரிழந்ததுடன் 11 பேர் காணாமல்போயுள்ளனர். 

மொனராகலை மாவட்டத்தில் 1521 குடும்பங்களை சேர்ந்த 5262 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 04 பேர் உயிரிழந்துள்ளனர்

மாத்தளை மாவட்டத்தில் 7288 குடும்பங்களை சேர்ந்த 25813 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 28 பேர் உயிரிழந்ததுடன் 9 பேர் காணாமல்போயுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 85669 குடும்பங்களை சேர்ந்த 328577 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 பேர்  உயிரிழந்துள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12469 குடும்பங்களை சேர்ந்த 37389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் நால்வர் உயிரிழந்துள்ளனர்

கேகாலை மாவட்டத்தில் 20749 குடும்பங்களை சேர்ந்த 73558 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 32 பேர் உயிரிழந்ததுடன் 39பேர் காணாமல்போயுள்ளார். 

திருகோணமலை மாவட்டத்தில் 26009 குடும்பங்களை சேர்ந்த 86685 பேர் பாதிக்கப்ட்படுள்ளனர்.  

அநுராதபுரம் மாவட்டத்தில் 21948 குடும்பங்களை சேர்ந்த 72359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 21958 குடும்பங்களை சேர்ந்த 37389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சி மாவட்டத்தில் 8878 குடும்பங்களை சேர்ந்த 28093பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அம்பாறை மாவட்டத்தில் 6942 குடும்பங்களை சேர்ந்த 23781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

யாழ் மாவட்டத்தில் 16918 குடும்பங்களை சேர்ந்த 53828 பேர் பாதிக்கப்படுள்ளதுடன் 3 பேர்  உயிரிழந்துள்ளனர் 

பொலன்னறுலை மாவட்டத்தில் 11570 குடும்பங்களை சேர்ந்த 41128 பேர் பாதிக்கப்படுள்ளனர்.இருவர் உயிருழந்துள்ளனர் 

கண்டி மாவட்டத்தில் 51098 குடும்பங்களை சேர்ந்த 161140 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 234 பேர் உயிரிழந்ததுடன் 81பேர் காணாமல்போயுள்ளனர். 

இரத்தினபுரி மாவட்டத்தில் 18593 குடும்பங்களை சேர்ந்த 72381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்

குருநாகல் மாவட்டத்தில் 25055 குடும்பங்களை சேர்ந்த 85891 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 61 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காணாமல்போயுள்ளனர் 

நுவரேலியா மாவட்டத்தில் 19780 குடும்பங்களை சேர்ந்த  63121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 89 பேர் உயிரிழந்ததுடன் 37 பேர் காணாமல்போயுள்ளனர். 

 

 


மாத்தறை மாவட்டத்தில் 448 குடும்பங்களை சேர்ந்த 1671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஹம்பாந்தோட்டை  மாவட்டத்தில் 3353 குடும்பங்களை சேர்ந்த 11733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரழந்துள்ளார்

காலி  மாவட்டத்தில் 518 குடும்பங்களை சேர்ந்த 1795 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

களுத்துறை மாவட்டத்தில் 2013 குடும்பங்களை சேர்ந்த 7093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மன்னார் மாவட்டத்தில் 23641 குடும்பங்களை சேர்ந்த 77451பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர் 

கம்பஹா மாவட்டத்தில் 3117 குடும்பங்களை சேர்ந்த  12251 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர். 

வவுனியா மாவட்டத்தில் 6320 குடும்பங்களை சேர்ந்த 20785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை நாடுமுழுவதும் 5354 பேர் முழுமையாக வீடுகளை இழந்துள்ளனர்.  81621 பேரின் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 20373 குடும்பங்களை சேர்ந்த 63628 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.