அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களைப் பெறுவதற்காக திறைசேரியிலிருந்து ரூபாய் 25 000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது .

 


நாட்டில் அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கொடுப்பனவு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில் நேற்று (05) உரையாற்றும் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர் “அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களைப் பெறுவதற்காக திறைசேரியிலிருந்து ரூபாய் 15 000 உதவித்தொகை வழங்கவும் மேலதிகமாக ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூபாய் 10 000 உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.