இலங்கையை தாக்கிய ‘தித்வா’ புயல் காரணமாக நாட்டின் 20 வீத நிலப்பரப்பு வெள்ளத்தில் மூழ்கி சேதம்.

 


 

 

இலங்கையை தாக்கிய ‘தித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் சேதங்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் புதிய மற்றும் அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம் நாட்டின் 1.1 மில்லியன் ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐந்திலொரு பகுதி நிலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 2.3 மில்லியனுக்கும் அதிகமான மக்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் ஆண்கள் என்றும் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இந்த புள்ளிவிவரங்கள்,இலங்கையின் வரலாறு காணாத பேரழிவின் தீவிரத்தையும்,உடனடி மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளின் அவசியத்தையும் உணர்த்துகிறது.